மரியாதையாக பணத்தை இப்ப எடுத்து வை..! அத்துமீறிய வங்கி ஊழியர்கள்..! பெண் எடுத்த அதிரடி முடிவு..! திரும்பி பார்த்த ஈரோடு மக்கள்
வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண், வங்கி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு, முனிசிபல் காலனியை சேர்ந்த மெய்வேல் மனைவி கீதா, டைய்லரிங் தொழில் செய்து வருகிறார்.
இவர், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் 3 லட்ச ரூபாய் தனிநபர் கடன் வாங்கியுள்ளார். 24 மாத காலத்தில் மாதம் 15 ஆயிரம் வீதம் தவனைத்தொகையை செலுத்தி வந்தனர்.
கீதாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால்,
மூன்று மாதம் தவணைத் தொகை உரிய நேரத்தில் கட்ட முடியவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மாத கடன் தவணைத் தொகையை கீதா கட்டி உள்ளார். தீபாவளிக்கு பிறகு மீதி பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் வங்கி ஊழியர்கள் கீதாவை தரை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து,
கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்கு சென்ற கீதா.
அலுவலக நுழைவு வாயுவு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.