ஈரோடு ஹோட்டலில் 3 நாள் தங்கியது யார்? ரூமை பார்த்தால் பேரதிர்ச்சி - டெல்லி விரைந்த தமிழக போலீஸ்
ஈரோடு சக்தி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை 2 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் காலி செய்த பின்னர் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்த போது, நாட்டு துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருந்துள்ளன. அவற்றை பறிமுதல் செய்து விடுதி மேலாளர், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி அடிப்படையில் இருவரது விவரங்களை சேகரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர்களை பிடிக்க டெல்லி விரைந்தனர். தொடர்ந்து, துப்பாக்கி பயன்படுத்தியதாக 24 வயதான சாரிப்கான் என்பவரை டெல்லியில் வைத்து கைது செய்த போலீசார், ரயில் மூலம் ஈரோடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
Next Story