தொழில் போட்டியில் கடையை சூறையாடிய கட்சி பிரமுகர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தொழில் போட்டி காரணமாக பழக்கடையில் இருந்த வாழைத்தார்களை திமுக பிரமுகர் சேதப்படுத்தி, கடை ஊழியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம்பியூரில் பழக்கடை நடத்தி வரும் திமுக பிரமுகர் அல்லா பிச்சைக்கும், அப்பாஸ் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பாஸின் கடைக்குச் சென்ற அல்லா பிச்சை, கடையில் இருந்த வாழைத்தார்களை சேதப்படுத்தி, அப்பாஸின் தாயார் மற்றும் ஊழியர் அபிஷேக் ஆகியோரை தாக்கியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story