எலி மருந்து பேஸ்ட்டால் பறிபோன குழந்தையின் உயிர் - பதற்றத்தில் தாய் செய்த செயல்
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த விஜயகுமார் - திவ்யா தம்பதிக்கு இரண்டரை வயதில் ரோகித் என்ற ஆண் குழுந்தை உள்ளது. வீட்டில் இருந்த எலி மருந்து பேஸ்ட்டை, இரண்டரை வயது குழந்தை சாப்பிடுவதைக் கண்ட திவ்யா, அதிர்ச்சி அடைந்து அவரும் அதனை சாப்பிட்டுள்ளார். மயக்கமடைந்த நிலையில் கிடந்த இருவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தபின், குழந்தை நன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென குழந்தை ரோகித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதே குழந்தையின் இறப்பிற்கு காரணம் என குற்றம்சாட்டி மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story