"ஜன்னல் சீட், இளையராஜா பாட்டு, மழை".. இதுதானோ?
பவானி அருகே மழை பெய்தபோது அரசு பேருந்தின் உள்ளே நீர் வழிந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். நேற்று இரவு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சித்தோடு வழியாக பவானி சென்ற 3B என்ற அரசு பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது திடீரென கனமழை பெய்தநிலையில், பேருந்தின் மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் குடைபிடித்து பயணம் செய்யும் அவலநிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர்.
Next Story