வாடகை பாத்திர கடையில் தீ விபத்து - அமைச்சர் முத்துசாமி ஆறுதல்

x

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே மணி என்பவர் நடத்தி வரும் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் ரூபாய் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்நிலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இடத்தை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு, கடை உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

சேதமடைந்த பொருட்கள் மற்றும் அதன் மதிப்பீடுகளை கணக்கிட்டு, கட்சி சார்பில் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்