கோடிகளில் டௌரி..! மனைவிக்கே தெரியாமல் 2ம் கல்யாணம் 'கோல்மால்' குடும்பத்தால் நடுத்தெருவில் பெண்

x

ஈரோட்டில், முதல் மனைவியின் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவன பங்குகளை ஏமாற்றிய புகாரில், தலைமறைவான கணவன் குடும்பத்தினர் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு அடுத்த முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், யுத்தி என்ற இளம்பெண்ணுக்கும் இடையே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது சீதனமாக 200 சவரன் தங்க நகை, டைமண்ட் நெக்லஸ், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் BMW கார் வாங்குவதற்காக 75 லட்சம் ரூபாய் ஆகியவற்றை யுத்தியின் பெற்றோர் வழங்கி உள்ளனர். ஜவுளி தொழில் செய்து வந்த சந்தோஷ் குடும்பத்தினர், தனியாக ஜவுளி நிறுவனம் ஒன்றை தொடங்க யுத்தியின் பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த புதிய நிறுவனத்தில் யுத்தியையும், சந்தோஷின் அண்ணியான ஹரிநந்தினியையும் நிறுவன இயக்குனர்களாக அவர்கள் நியமித்தனர். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக, யுத்தி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில், இந்த தம்பதியின் விவாகரத்து தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, சந்தோஷிற்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் 2வது திருமணம் நடந்தது தெரியவரவே இளம்பெண் யுத்தி அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டுமல்லாமல், தனது பெயரில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, சந்தோஷ் குடும்பத்தினர் போலியாக கையெழுத்திட்டு வேறொருவரின் பெயருக்கு மாற்றி இருப்பதும் தெரியவரவே, பாதிக்கப்பட்ட இளம்பெண் யுத்தி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்