நிமிடங்களில் சாம்பலான வாழ்வு... ஏழை பெண்ணை.. குரோதம் தணித்த `தீ'...பார்ப்போரை கலங்கடிக்கும் காட்சி
ஈரோட்டில் வீட்டு வேலை பார்த்து வந்த பெண் ஒருவர் தன் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் நெருப்புக்கு கொடுத்து விட்டு கதறி அழும் காட்சி பார்ப்போரை கலங்க வைக்கிறது..
வீட்டின் ஓட்டை பிரித்து வெளியேறும் இந்த புகை, பெண் கூலித்தொழிலாளி ஒருவரின் உழைப்பை குடித்து, அவரை கண்ணீரில் தத்தளிக்க விட்டிருக்கிறது...
வீட்டு வேலை செய்து இப்பெண் சிறுக சிறுக சிறுக சேர்த்த பணத்தையும், தங்க சங்கிலியையும்... தனக்கு இரையாக்கி குரோதம் தணித்திருக்கிறது தீ...
ஈரோடு, வீரப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரின் வீட்டில் அரங்கேறிய சம்பவம்தான் இது...
வீட்டிற்குள் திடீரென தீப்பற்றி எரிவதாகவும், கரும்புகை வீட்டின் ஓட்டை பிரித்து வெளியேறுவதாகவும் அக்கம்பக்கத்தினர் கூற, பதறிப்போய் ஓடி வந்திருக்கிறார் மல்லிகா...
வீட்டிற்குள் இருந்த டிவி, சமையல் பொருள்கள் தொடங்கி அனைத்திலும் பற்றி எரிந்த தீ.... உடைமைகளுடன் சேர்த்து, அவர் சம்பாதித்து வைத்திருந்த பணத்தையும், நகையையும் வாரி சுருட்டியது பெண்ணை கதி கலங்கச் செய்திருக்கிறது..
சுமார் 13 ஆயிரம் ரூபாய் வரையிலான 500 ரூபாய் நோட்டுகள் தீயில் கருகியதாக கூறப்படும் நிலையில், பெண்ணின் துக்கத்தில் பங்கெடுத்த தீயணைப்புத்துறை வீரர்கள், உருக்குலைந்த வீட்டை மீட்கும் முயற்சியில் இறங்கினர்...
தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்...