இன்று ஈபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன? - உற்றுநோக்கும் அரசியல் களம்
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. கடந்த 20ந்தேதி தொடங்கிய தமிழக சட்டப்பரேவை கூட்டத்தில் தினந்தோறும் பல துறைகள் மீதான மானிய கோரிக்கைகள்
மீது விவாதம் நடைபெற்று வருகிறது.நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி , பள்ளி கல்வி, வருவாய்துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அவை நடவடிக்கைகளை புறக்கணித்த, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story