OPS கோட்டையில் டெபாசிட் இழந்தது ஏன் என சரமாரியாக கேள்வி கேட்ட EPS..

x

OPS கோட்டையில் டெபாசிட் இழந்தது ஏன் என சரமாரியாக கேள்வி கேட்ட EPS..நிர்வாகிகளின் பதிலால் கொதித்த ரத்தம் - டென்ஷனில் வெளுத்துவிட்ட எடப்பாடி

2026 தேர்தல் ஒன்றையே கருத்தில் கொண்டு கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என அதிமுக நிர்வாகிகளிடம் ஈ.பி.எஸ் வலியுறுத்தி உள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதற்கட்ட கலந்தாய்வில் 23 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் 2வது கட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மீதமுள்ள 17 தொகுதி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், தேனி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஈ.பி.எஸ், தேனி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொடுத்தும், எப்படி அதிமுக டெபாசிட் இழந்தது என கேட்டதாக தெரிகிறது. இதற்கு நிர்வாகிகள், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்பதால் பின்னடைவு ஏற்பட்டது என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பிரபலம் முக்கியம் இல்லை... சின்னம் தான் முக்கியம்.., இரட்டை இலை சின்னத்தை விட வேறு என்ன வேண்டும் எனக் கூறிய ஈ.பி.எஸ், மக்கள் பிரச்சனைகளை வீடு வீடாக கொண்டு சென்று தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்