ஈபிஎஸ் வீட்டின் முன்பு குத்தாட்டம் போட்ட தொண்டர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பாக மழையில் குத்தாட்டம் போட்ட தொண்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் ஈபிஎஸ் தனது 70 வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். இதனால், தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோா அவரது இல்லத்திற்கு படையெடுத்தனர். அதன்படி வருகை தந்த தொண்டர்களில் ஒருவர், மழையில் நனைந்தவாறு, பாடல் பாடி, நடனமாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்