ஒரே சமயத்தில் ஈபிஎஸ், விஜய் சேதுபதி வருகை..! அலைமோதிய கூட்டம் |

x

ஒரே சமயத்தில் ஈபிஎஸ், விஜய் சேதுபதி வருகை..! அலைமோதிய கூட்டம்

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஒரே சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், நடிகர் விஜய் சேதுபதியும் வருகை தந்ததால் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறும் அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், அதே விமானத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வந்துள்ளார். அவரை பார்த்த உற்சாகத்தில் ஏராளமானோர் விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்