முன்னாள் அமைச்சரை தூக்கி எறிந்த ஈபிஎஸ்.. ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற பாஜக

x

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி விதிகளுக்கு மாறுபட்டு நடந்து கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அதிமுக மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்