``உடனடியாக வேண்டும்..'' - ஈபிஎஸ் திடீர் கோரிக்கை | EPS
2023-24ம் ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் தொகையாக, டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்திருந்தார். தீபாவளிக்கு முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. இதை சுட்டிக் காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இன்று வரை இத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக இதை வழங்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
Next Story