ஈ.பி.எஸ்.க்கு உடல்நலக் குறைவு? - தேர்தல் ஆணையத்தில் மனு
அதிமுக உறுப்பினர்கள் இராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. சுரேன் பழனிச்சாமி கொடுத்திருக்கும் மனுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பான விதிகள், தொண்டர்கள் உரிமைக்கு எதிரானது, திருத்தப்பட்ட விதிகள் படி 3 நபர்கள் மட்டுமே பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி உடல்நலக் குறைவு என்று நீதிமன்றத்தில் சொல்லியதை குறிப்பிட்டு, இதனால் அவரால் 2026 தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாமல் போகலாம், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு கூட பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் கட்சி புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும், புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தற்போதைய விதிகள் படி மற்றொரு தலைமைப் போர் எழும் எனவும் குறிபிடப்பட்டுள்ளது. தேர்தல் அரசியலில் அதிமுக மிக மோசமான கட்டத்தை அடைந்து வருகிறது. உள்கட்சி ஜனநாயகத்தை காக்கவும், அழிவிலிருந்து கட்சியை காக்கவும் 2023 ஏப்ரலில் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட கட்சி விதிகளை ஏற்றுக் கொண்டதை மறுபரிசீலனை செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்புபடி செயல்படுமாறு வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.