நுழைவுக் கட்டணம் 100 ரூபாய் மட்டுமே ....காவல் நிலையத்தில் குவிந்த மக்கள்
வேலூரில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுக்க ஏராளமானோர் குவிந்தனர். குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 363 வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நுழைவுக் கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் மைதான நுழைவாயில் முன்பு குவிந்தனர். 363 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. மாவட்ட எஸ்பி மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏலம் எடுத்த வாகனங்களுக்கு கூடுதலாக 18 சதவீதம் ஜிஎஸ்டி.யுடன் பணம் செலுத்தியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
Next Story