எண்ணூர் வாயு கசிவு..! 11வது நாளாக தொடரும் போராட்டம்... முழங்கிய பறை... களமிறங்கிய மாணவர்கள்..
சென்னை எண்ணூரில் தொடர்ந்து பதினோராவது நாளாக போராடிவரும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பறை அடித்து மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர். எண்ணூரில் அமோனியா கசிவு ஏற்பட்ட உர ஆலையை மூடக்கோரி, அப்பகுதி மக்கள் தொழிற்சாலை வாயிலில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், 11-வது நாளான இன்று மாணவர்கள் பறை அடித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
Next Story