"தொடர்ந்து அதிகரிக்கும் கட்டுமான பொருட்கள் விலை" - அரசுக்கு கட்டுமான பொறியாளர் சங்கம் வைத்த கோரிக்கை

x

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பொறியாளர் சங்க நிர்வாகிகள், தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் கட்டுமான மூலப்பொருட்களான ஜல்லிக்கற்கள்,எம் சாண்ட் மணல் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவதாக தெரிவித்தனர். இதனால், கட்டுமான பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க இயலாத நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

எம் சாண்ட் மணல் ஒரு யூனிட் 2 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். விலை உயர்வு காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் பொறியாளர்கள் உட்பட 3 லட்சம் கட்டுமான சார்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் நிலை இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே, கட்டுமான விலையை, சதுரடிக்கு 2 ஆயிரத்து 250 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்த இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்