இன்ஜினியரிங் கவுன்சிலிங்.. காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்

x

நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர சுமார் 2 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வை நடத்தக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், நாளை காலை தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அலுவலகத்தில், தொழில்நுட்ப ஆணையர் வீரராகவ ராவ் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவருக்கும் 200 மதிப்பெண்களுக்கான கட் ஆப் மதிப்பெண் விவரங்கள், கணினியில் நாளை காலை பதிவேற்றம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணைகளும் நாளை வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்