தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்...எந்த தேதியில் யாருக்கு? ரெடியாகும் மாணவர்கள்

x

தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்...எந்த தேதியில் யாருக்கு? ரெடியாகும் மாணவர்கள்

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் இன்ஜினீயரிங் மற்றும் பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 9 ஆயிரத்து 545 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 27ம்தேதி வரை நடக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டுப் பிரிவில் 2112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1223 பேரும் பங்கேற்கின்றனர். சிறப்புப் பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் 386 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்த பின், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 29-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3 வரை நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்