மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை..? - சைபர் கிரைமில் புகார்
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்திருந்த தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், சமூக விரோதிகள், தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு மாற்றி அமைத்து வெளியிட்டதாக கூறியிருந்தது. அதிகாரப்பூர்வமான தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் 88 புள்ளி மூன்று நான்கு சதவீதம் பொருந்தவில்லை எனவும் தெரிவித்திருந்தது. அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், 1800-425-0110 என்ற உதவி எண்ணுக்கு அழைத்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புகார் அளித்துள்ளது...