ED-க்கு எதிராக எரிமலையாய் வெடித்த ஜாபர் சாதிக்.. ஜாமின் கிடைத்தும் நிம்மதி இழப்பு
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிறது, டெல்லி போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதில் கூடுதல் விசாரணையை மேற்கொண்ட அமலாக்கப்பிரிவு, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை அமலாக்கப்பிரிவு கைது செய்தது. கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள வேளையில், அவரை கைது செய்ய அமலக்கத்துறை முடிவெடித்தது சட்டவிரோதம் எனவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது அமலாக்கப்பிரிவு வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்க கேட்டுக்கொண்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.