ஆற்று மணல் குவாரியில் அமலாக்க துறை அதிரடி ஆய்வு | ED Raid | Sand Mine
திருச்சி மாவட்டம் தாளக்குடி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில், மிதவை இயந்திரத்தின் உதவியுடன் அளவிடும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்... இதுகுறித்த விரிவான தகவல்களை எமது செய்தியாளர் வினோத்திடம் கேட்கலாம்...
திருச்ச ி மாவட்டம், தாளக்குடி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் இரண்டாவது முறையாக அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம், தாளக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மணல் குவாரியில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புடன் நள்ளிரவு வரை அமலாக்கத்துறையினர் மணல் குவாரி மற்றும் ஆவணங்களை பார்வையிட்டு சோதனை நடத்திவிட்டு சென்றனர்.
அன்றைய தினம் முதல் தற்போது வரை தாளக்குடி மணல் குவாரிகளில் லாரிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 19ம்தேதி அமலாக்கத்துறையினர் பொதுப்பணி அதிகாரிகளுடன் மணல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மணல் அருளப்பட்டுள்ளதா என பார்வையிட்ட ஆய்வு செய்து அளவிடும் பணியை தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது முறையாக மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் அளவிடும் பணியை நடத்தி வருகின்றனர்.
இந்த பணியில் 2 சி.ஆர்.பி.எப் வீரர் பாதுகாப்புடன் 2 அமலாக்கத்துறையினர் மேற்பார்வையில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
குவாரிக்குள் மணல் அள்ளப்பட்டுள்ள பகுதியில் மிதவை எந்திர கருவி மற்றும் அளவீடும் கருவிகளை கொண்டு அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறையினரின் அடுத்தடுத்த இதுபோன்ற நடவடிக்கையால் கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.