கால்வாயில் தவறி விழுந்த குட்டி யானை.. பல மணி நேரம் போராட்டம்... வனத்துறையினர் செய்த செயல்

x

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் உள்ள சாலை ஓர கால்வாயில் தவறி விழுந்த குட்டி யானையை, துரிதமாக மீட்டு தாய் யானையுடன் சேர்த்த வனத்துறையினர்களின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அப்பர்கார்குடி வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பிறந்து 3 நாட்களேயான குட்டி யானை, சாலை ஓர கால்வாயில் தவறி விழுந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை துரித கதியில் மீட்டு தாய் யானையுடன் சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்