ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்ற 3 யானைகள்..சுற்றி நின்று 4 யானைகள் செய்த செயல் - வெளியான காட்சிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மூன்று யானைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, 4 யானைகள் அதற்கு காவலாக இருந்த வீடியோ வெளியாகியுள்ளது. பந்தலூர் அருகே, எலியாஸ் கடை பகுதியில் உள்ள குன்றில் 7 யானைகள் முகாமிட்டுள்ளன. அந்த யானைகளில் 3 யானைகள் தூங்கி ஓய்வெடுக்க, அதற்கு 2 குட்டிகளும் 2 யானைகளும் காவலாக இருந்தன. பின்னர், அந்த யானைகள் ஓய்வெடுக்க, அதற்கு ஏற்கனவே தூங்கிய யானைகள் காவலாக இருந்தன.
Next Story