காலைக்கடன் கழிக்க டாய்லெட் கதவை திறந்தவர் கோர பலி
காலைக்கடன் கழிக்க வெளியில் வந்த முதியவர் காட்டு யானை தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
நீலகிரி தேவாலாஹட்டியைச் சேர்ந்த 75 வயது பழனியாண்டி என்ற முதியவர் காலையில் காலைக்கடன் கழிக்க வீட்டின் முன்பிருந்த கழிப்பறைக் கதவைத் திறந்துள்ளார்... அப்போது வீட்டின் முன்பாக நின்றிருந்த ஒற்றைக் காட்டு யானைக் கடுமையாகத் தாக்கியதில் பழனியாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்... கோபம் குறையாத அந்த யானை அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் காரையும் சேதப்படுத்தியது. தற்போதும் அந்த யானை அதே பகுதியில் ஆத்திரத்துடன் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story