மின் கட்டண உயர்வு.. புதிய பகீர் கிளப்பிய அண்ணாமலை | electricity bill
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்று மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இல்லாமல், பொதுமக்கள் ஏற்கனவே 50% அதிகமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள் என்றும், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் அரசு சுமத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையால், பொதுமக்கள் பலிக்கடாவாகின்றனர் என்றும் உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடுமாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.