ரூ.100 கோடி வழங்கிய நிறுவனத்திற்கு ரூ.14,000 கோடி ஒப்பந்தம்... வெளியான பகீர் தகவல்

x

100 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த நிறுவனத்துக்கு ரூபாய் 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். மேகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 100 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடையாக கொடுத்துள்ளதாக கூறினார். அதைத் தொடர்ந்து, ஒரே மாதத்தில் அந்த நிறுவனத்துக்கு 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான சுரங்க சாலை கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசு வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த நிறுவனம், எந்த கட்சிக்கு நிதி வழங்கியது என்பது தொடர்பான தரவுகளை பாரத ஸ்டேங்கி வெளியிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்