சர்ச்சையை கிளப்பிய பதிவுகள்... டென்ஷனான ECI... பாஜக பிரமுகருக்கு பறந்த எச்சரிக்கை
தனிநபர் தாக்குதல் நடத்தும் விதமாக அவதூறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா மற்றும் பாஜக பிரமுகர் திலீப் கோஷ் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சல் மாநிலத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா பதிவிட்டு இருந்தார். இதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி அவதூறு கருத்து தெரிவித்த மேற்குவங்க பாஜகவின் மூத்த தலைவர் திலிப் கோஷ்க்கும் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது தன்னுடைய பொது பிரசாரத்தில் கவனமுடன் இருக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story