அந்த வேட்பாளர் காரில் இருந்தது என்ன? - ஊடகங்களில் பரவிய தகவல்..அதிகாரிகளுக்கு பறந்த எச்சரிக்கை!

x

பிரபலமான வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சி வேட்பாளர்களிடமும் தேர்தல் அதிகாரிகள் உறுதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீறினால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று, தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குன்னூர் அருகே நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனை செய்ததில் மெத்தனம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்த விசாரணையில்,

தேர்தல் பணிகளில் குளறுபடிகள் கண்டறியப்பட்டதால், பறக்கும் படை குழுவின் தலைவி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரபலமான வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சி வேட்பாளர்களிடமும் உறுதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதை மீறினால் அதை ஆணையம் கண்காணிக்கும் என்றும்,

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதில் சம நிலைக்காக ECI வழங்கிய MCC வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்