"கையில் ரூ.50000 எடுத்து செல்வதில் மாற்றம் வருமா?" - தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன விஷயம்
50 ஆயிரம் ரூபாய் பணம் கையில் எடுத்து செல்லும் விவகாரம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்று வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Next Story