பாரம்பரிய தொகுதியை மீட்பாரா ராகுல்..? - தேர்தல் ஃபீவரில் 49 சீட்ஸ்?
பாபாரம்பரிய தொகுதியை மீட்பாரா ராகுல்..? - தேர்தல் ஃபீவரில் 49 சீட்ஸ்?
மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. நாளை ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, மத்திய அமைச்சர் ஸ்மிதி இரானி போட்டியிடும் அமேதி உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பிரச்சாரம் நிறைவடைந்ததால், வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில், வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்க, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.