1 மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் - தேர்தலால் அடித்த ஜாக்பாட் - புருவத்தை உயர செய்யும் தகவல்

x

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல பல தலைவர்களும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருவதால் ஹெலிகாப்டரின் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இன்னும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடியாத நிலையில், அதற்குள் ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 350 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை லாபம் பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு சிங்கிள் இன்ஜின் ஹெலிகாப்டர் என்றால் 1.5 லட்சம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இதுவே 15 பேர் அமர்ந்து செல்லக்கூடிய அகஸ்டா வெஸ்ட்லேன்ட் வகை ஹெலிகாப்டர் என்றால் ஒரு மணி நேரத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இம்முறை மாநிலங்கள் அளவிலான கட்சிகளில் இருந்தும் அதிகளவில் ஹெலிகாப்டர்கள் கோரப்படுவதால் ஹெலிகாப்டர்கள் தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஹெலிகாப்டர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்