சூடு பிடிக்கும் தேர்தல் களம் - சென்னையில் கூடும் 4 மாநில தேர்தல் அதிகாரிகள்

x

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு சென்னை வந்தனர்.

மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அவர்கள், வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், பிற்பகலில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்துகின்றனர். அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும், வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்துகின்றனர். பின்னர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள். இந்த ஆலோசனையின்போது, தமிழ்நாட்டில் ஒரே நாளில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பது, பாதுகாப்பு பாடுகளை எப்படி மேற்கொள்வது, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை மாலை அவர்கள், டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்