பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட முதியவர் - மருத்துவமனையில் அனுமதி
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில், அதேப்பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், தோசை ஒன்றை பார்சல் வாங்கியுள்ளார்.
இத்தோசையை உண்ட, தங்கராஜின் தந்தை அண்ணாமலை, குருமாவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் கலவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Next Story