ஒரே நாளில் விண்ணை தொட்ட முட்டை விலை.. காலையிலே அதிர்ச்சி சேதி.. நாமக்கல்லிலே இந்த விலையா?

x

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து குறைந்து வந்த முட்டை விலை ஒரே நாளில் அதிரடியாக 60 பைசா உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வர உள்ளதாலும், பள்ளிகள் திறக்கப்பட்டு, சத்துணவு திட்டத்திற்கு முட்டைகள் அனுப்பப்படுவதாலும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால், பிற மண்டலங்களிலும் முட்டை விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல்

மாவட்டத்தில் ஆயிரத்து 150க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் ஐந்தரை கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்