தனியார் பள்ளி நிர்வாகிகள் போராட்டம்.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பி வருவதால் தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேண்டுமென்றே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் அங்கீகாரம் அளிக்க லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொதுத் தேர்வு எழுத அனுமதித்தது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ள நந்தகுமார், அதிகாரிகளின் போக்கை கண்டித்து, ஜூன் 12-ம் தேதி தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
Next Story