அக்கவுண்டில் கொட்டிய கோடிகள்... "யார் அது?" ED-யே மிரண்டு போய் தேடி வந்ததால் பெரும் பரபரப்பு
திருவள்ளூர் அருகே 3 கோடி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை விவகாரத்தில், விசாரணைக்காக 4 இளைஞர்களை அமலாக்கத்துறையினர் பெங்களூரு அழைத்து சென்றனர்.
குமாரராஜபேட்டை, மோட்டூர் கிராமங்களில் வசிக்கும் தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகிய 4பேரின் வங்கி கணக்கு மூலம் 3 கோடி ரூபாய் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. தகவல் அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், 20க்கும் மேற்பட்டோர், தனிக் குழுவாக பிரிந்து 4 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். பின்னர், வங்கி கணக்கு விவகரம், குடும்ப பின்னணி, தொழில் குறித்து சுமார் 10 மணி நேரம் துருவி துருவி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பள்ளிப்பட்டு காவல்நிலையத்திற்கு 4 பேரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகிய 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூரு அழைத்துச் சென்றனர்.