பிடியை இறுக்கிய ED - லிஸ்டுலையே இல்லாத அடுத்த ஸ்கெட்ச்

x

ஜாபர் சாதிக் உள்ளிட்டோரை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, மும்பை போதை பொருள் வழக்கையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேர்த்துள்ளது.

2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உட்பட ஏழு பேரை மத்திய போதை பொருள் தடுக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடத்த‌லில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி, அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு 38 கிலோ கேட்டமைன் போதை பொருள் கடத்திய வழக்கிலும், சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி, எஃப்.ஐ.ஆரில் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள பெரோஸ் கான், நூர் உள்ளிட்டோரையும் அமலாக்கத் துறையினர் தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறை, விசாரணை பிடியை இறுக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்