"நெல்லை சம்பவம்... அதிர்ச்சி"யில் ஈபிஎஸ் போட்ட பதிவு

x

பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலியில் ஜாதி ரீதியிலான பிரச்சனையால் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை அரசு போதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்