காதுக்கு வந்த செய்தி - கேட்டதும் கொதித்த ஈபிஎஸ்
காதுக்கு வந்த செய்தி - கேட்டதும் கொதித்த ஈபிஎஸ்
முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன என்றும், சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் திமுக அரசு ஏற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story