எடப்பாடியை அதிரவைத்த 20 வயது இளைஞர்...சொன்ன காரணம்தான் ஹைலைட்

x

எடப்பாடியை அதிரவைத்த 20 வயது இளைஞர்...சொன்ன காரணம்தான் ஹைலைட்

எடப்பாடியில், பெயர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் காவலர் ராமச்சந்திரன் என்பவர் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர்

திடீரென காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் ராமச்சந்திரன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததுடன், அந்த மர்ம நபரை தேடி சென்றார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளின்படி, பெட்ரோல் குண்டை வீசிவிட்டு எடப்பாடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பழைய எடப்பாடியை சேர்ந்த 20 வயதான ஆதி என்ற ஆதித்யா என்பதும், தனது பெயர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்