காத்திருந்த கவிதாவுக்கு ஷாக்... இறுக்கும் ED; நெருக்கும் CBI - கோர்ட் அதிரடி உத்தரவு

x

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் கவிதா உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை விசாரணையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த கவிதாவை அமலாக்கத்துறை மார்ச் 15 ஆம் தேதி கைது செய்தது. அமலாக்கத்துறை விசாரணையோடு சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. சமீபத்தில் சிபிஐ துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்த துணை குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான விசாரணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜூலை 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதுவரையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான நீதிமன்ற காவலையும் நீட்டித்தது.


Next Story

மேலும் செய்திகள்