E.D. கைதான விவகாரம்... அதிகாரி மீது அமலாக்கத்துறை வழக்கு
அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், அங்கித் திவாரி மீது அமலாத்துறை வழக்குப்பதிவு செய்ததுடன், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, அமலாக்கத்துறையின் விசாரணையின்போது தங்களது தரப்பினரும் உடன் இருக்க வேண்டும் எனக்கோரி, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Next Story