மாமல்லபுரத்தில் பரவசமடைந்த பிரெஞ்சு ஜோடி - வைரலாகும் வீடியோ

x

மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டு தம்பதியான பாஸ்கல் - ரோசி சுற்றுலா வந்தனர்... அவர்கள் அர்ச்சுனன் தபசு சாலை வழியே புராதன சின்னங்களைப் பார்த்து வந்த நிலையில், அப்போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோவிலில் மார்கழி பஜனை ஊர்வலம் துவங்கியது... மார்கழி இசையில் மயங்கிய பிரான்ஸ் தம்பதி, கோவிலில் வழங்கப்பட்ட மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, நெற்றியில் நாமமிட்டு, தாளம் வாங்கி இசைத்தபடி பஜனைக் குழுவுடன் தங்களையும் இணைத்துக் கொண்டு ஊர்வலம் புறப்பட்டு நடனமாடிச் சென்றனர்... இச்சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... தொடர்ந்து அத்தம்பதி கோவிலில் வழங்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலை ஆசை ஆசையாய் வாங்கி ருசித்து விட்டு புறப்பட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்