ஜன.6ல் வாக்காளர் பட்டியல் வெளியாகும் - தேர்தல் ஆணையம் | Election Commission Of India

x

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி வரும் 20-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டைகளை சரி பார்ப்பார்கள். இதற்கிடையே, 17 வயது முடிந்ததுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியானதும், தானாக பெயர் சேர்க்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். இதற்கு ஏதுவாக, ஆண்டுதோறும் ஜனவரியில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். இதன்படி, 1.1.2025ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்வது தொடர்பான கால அட்டைவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்களார் பட்டியல் பணிகள், 20 ஆகஸ்ட் முதல் அக்டோபர் 18 வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை அக்டோபர் 29ஆம் தேதி வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் என்விஎஸ்பி இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்.


Next Story

மேலும் செய்திகள்