"இந்த ஆப்பிள் சாப்பிடுங்க பாட்டி"வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி.. கைவரிசை காட்டிய பலே திருடி
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவசேகர் - ஜெயந்தி தம்பதியினர்.
இருவரும் ஆசிரியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் சிவசேகரின் தாயான மூதாட்டி பெருமா தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், காரில் வந்து இறங்கிய பெண் ஒருவர், மருமகள் ஜெயந்தியின் தோழி என கூறி மூதாட்டியிடம் பேசி இருக்கிறார். பின்னர், தான் கொண்டு வந்த ஆப்பிளை சாப்பிடுமாறு கொடுக்க, அதனை சாப்பிட்ட மூதாட்டி சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த பெண், வீட்டில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு, காரில் தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story