5-ல் நடக்க தவறியது 50-ல் நடந்தது..."போட்டோ புடிக்கிறாங்களா அண்ணே"கலாய்த்த சிறுமி...களைகட்டிய விசேஷம்

x

வேலூர் மாவட்டம் ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்த 60 வயதான முனிவேல் என்பவருக்கும், 55 வயதான ராஜா என்பவருக்கும் சிறுவயதில் காது குத்தாமல் இருந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் அவர்கள் இருவரையும் கிண்டல் செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு காது குத்து விழா நடத்த குடும்பத்தார் முடிவு எடுத்துள்ளனர். அதன்படி குல தெய்வ கோயிலில் அவர்களுக்கு காது குத்து விழா நடைபெற்றது. 85 வயது உடைய அவர்களது தாய்மாமனின் அருகே அமர வைத்து, அவர்களுக்கு காது குத்து விழா நடைபெற்றது. தொடர்ந்து அவர்களது தாய்மாமன், இருவருக்கும் வாழைப்பழத்தை ஊட்டியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதில் அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்