DSP-யே வீட்டை விலைக்கு கேட்டும் கொடுக்காத IT ஊழியர்..திடீரென மாயமானதால் மதுரையில் பரபரப்பு

x

மதுரையில் பெண் துணை கண்காணிப்பாளர் வீட்டருகே வசித்த ஐடி ஊழியர் காணவில்லை என தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய வீட்டருகில், காவல் துறையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரியும் வினோதினி என்பவர் வசித்து வருகிறார்.

கிருஷ்ணகுமாரின் வீட்டை வினோதினி விலைக்கு கேட்டதாகவும், அதற்கு கிருஷ்ணகுமாரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுவந்துள்ளது.

இதன்காரணமாக கிருஷ்ணகுமார் தனது வீட்டில் CCTV கேமராவை பொறுத்தியதால், தங்கள் வீட்டை கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்பட்டதாக வினோதினியின் சகோதரி அமுதா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீஸ் விசாரணைக்குப் பின், மாடியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை கிருஷ்ணகுமார் அகற்றியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கிருஷ்ணகுமார், மறுநாள் வெளியே சென்றுள்ளார்.

அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பதால், கிருஷ்ணகுமாரின் தாயார் கஸ்தூரி கலா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்