வறண்டு கிடக்கும் வைகை ஆறு...ஆமை வேகத்தில் தூர்வாரும் பணி..வரப்போகும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உறை கிணறுகள் வற்றிய நிலையில், வைகை அணையின் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..
வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு மலைப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு வைகை ஆற்றில், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகரித்தால், வைகை ஆறு வழக்கத்திற்கு முன்பாகவே வறண்டு மணல் மேடாகியது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறைகிணறுகளை தூர்வாரும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்தினை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது